வைகை ரயில் சென்னைக்கு வராது – பாதியில் நிறுத்தம்!!

வைகை ரயில் சென்னைக்கு வராது – பாதியில் நிறுத்தம்!!

Update: 2021-12-31 08:31 GMT

ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், நான்கு ரயில்கள் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 5 மற்றும் 19ஆம் தேதிகளில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ், விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு, ஜனவரி 5 மற்றும் 19ஆம் தேதிகளில் இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ், விழுப்புரத்தில் இருந்து மாலை 6:10 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து, ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு இயக்கப்படும் பினாக்கினி எக்ஸ்பிரஸ், ஜனவரி 4ஆம் தேதி கூடுரில் இருந்து புறப்படும். விஜயவாடாவிலிருந்து வரும் ரயில் கூடூரில் நிறுத்தப்படும்.

 புதுச்சேரி - புதுடில்லி வாராந்திர ரயில், ஜனவரி 5 மற்றும் 19ம் தேதிகளில் மாற்று வழியில், விழுப்புரம், காட்பாடி, அரக்கோணம் வழியாக செல்லும். இந்த ரயிலில் எழும்பூரில் இருந்து பயணிக்க முன்பதிவு செய்தவர்கள் பெரம்பூர் நிலையத்தில் ஏறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News