பெட்ரோல் விலை மீம்ஸு-க்கு வைரமுத்து கலக்கல் ரியாக்ஷன்..!
பெட்ரோல் விலை மீம்ஸு-க்கு வைரமுத்து கலக்கல் ரியாக்ஷன்..!
இந்தியாவில் எரிவாயு விலை தினமும் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 91.68-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 85.01-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் மாறிவரும் பெட்ரோல், டீசல் விலையை குறிப்பிட்டு பல மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் இணையத்தில் உலா வருகின்றன. கவிஞர் வைரமுத்து இயற்கை படத்திற்காக எழுதிய “காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. உயிரோடு இருந்தால் வருகிறேன்..” என்கிற வரியை சிலர் மாற்றியுள்ளனர்.
அதன்படி “காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. உயிரோடு இருந்தால் வருகிறேன்..” என்பதற்கு பதிலாக, “காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. பெட்ரோல் இருந்தால் வருகிறேன்..” என்கிற மீம்ஸ் பலரையும் கவரிந்துள்ளது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்துக்கு இந்த மீம்ஸை ரசிகர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு அவர், “என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
என் பாட்டு வரியை மாற்றி
— வைரமுத்து (@Vairamuthu) February 17, 2021
எனக்கே அனுப்புகிறார்கள் :
'காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’#PetrolDieselPriceHike