முன்னணி நடிகர் நடிக்கும் பட வாய்ப்பை அலேக்காக கைப்பற்றிய வனிதா...!

முன்னணி நடிகர் நடிக்கும் பட வாய்ப்பை அலேக்காக கைப்பற்றிய வனிதா...!

Update: 2021-03-13 20:12 GMT

ரியாலிட்டி ஷோக்களில் கலக்கி வரும் சர்ச்சை நாயகி வனிதா, சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட முன்னணி நடிகரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அந்தாதுன். தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்த படம் தேசியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. 

தற்போது இந்த படம் தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. படத்தில் கதாநாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சர்ச்சை நாயகி வனிதாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக படக்குழு மற்றும் நடிகர் பிரசாந்துக்கு நன்றி தெரிவித்து வனிதா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


அதை டேக் செய்து வனிதாவுக்கு நன்றி கூறியுள்ள பிரசாந்த், அவருடன் நடிக்கவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரசாந்த பதிலளித்துள்ளார். இதன்மூலம் அந்தகன் படத்தில் அவர் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் எதுபோன்ற கதாபாத்திரம் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

அதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பாம்புச் சட்டை’ படத்ட்தை இயக்கிய இயக்குநர் அடுத்ததாக ‘அனல் காற்று’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வனிதா விஜயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News