தொடர் மழையால் பாலம் இடிந்ததால் ஆற்றுக்குள் பாய்ந்த வாகனங்கள்.. அதிர்ச்சி வீடியோ !

தொடர் மழையால் பாலம் இடிந்ததால் ஆற்றுக்குள் பாய்ந்த வாகனங்கள்.. அதிர்ச்சி வீடியோ !

Update: 2021-08-28 06:50 GMT

இந்தியாவின் தமிழகத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டேராடூன்- ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ஜக்கான் ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. இரு நரங்களை இணைக்கும் முக்கியமான வழித்தடம் என்பதால், அப்பாலத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த நிலையில் பாலம் திடீரென இடிந்ததால் பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. அங்கு விரைந்த வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

இந்த பாலம் இடிந்து விழுந்ததால் டேராடூன் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

இதேபோல் மால்தேவ்டா-சகஸ்திரதாரா இணைப்பு சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தொடர் மழையால் தபோவன்-மலேதா நெடுஞ்சாலை மூடப்பட்டது. நிலச்சரிவு காரணமாகவும் சில சாலைகள் மூடப்பட்டுள்ளன.


newstm.in

Tags:    

Similar News