வேலு நாச்சியார் பிறந்த நாள்: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!

வேலு நாச்சியார் பிறந்த நாள்: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!

Update: 2022-01-03 13:20 GMT

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.


ஜான்சி ராணிக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார். வீரம் மிக்க பெண்மணியான வேலு நாச்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதில், “வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்.


அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News