"விவசாயிகள் போராட்டம் குறித்து நாளை விவாதம்" வெங்கையா நாயுடு அறிவிப்பு !

"விவசாயிகள் போராட்டம் குறித்து நாளை விவாதம்" வெங்கையா நாயுடு அறிவிப்பு !

Update: 2021-02-02 15:00 GMT

விவசாயிகள் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நாளை நடைபெறும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

இந்திய பாராளுமன்றம் கடந்த 29-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. நேற்று, அதாவது பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  உரையில் விவசாயிகள் போராட்டம் குறித்து தெரிவித்து இருந்தார். இதனால் இன்று மாநிலங்களவையில் விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நாளை நடைபெறும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில், குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது.  முகர்பா சவுக், காசிப்பூர், ஐடிஓ, சீமாபூரி, நங்லோய் டி பாயின்ட், டிக்ரி எல்லை, செங்கோட்டை பகுதிகளில் மிகப்பெரகிய கலவரம் மூண்டது. போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் ஏறி, விவசாய சங்க கொடியை ஏற்றி வைத்து, ஜிந்தாபாத் என முழக்கமிட்டனர். அவர்களை தடுக்கமுடியாமல் போலீசார் தவித்தனர். 

இதனையடுத்து, டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, போலீசார் - விவசாயிகள் மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். அவரை போலீசார் தான்  கொன்றதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், போராட்டம் தீவிரம் அடையில் நிலையில் உள்ளது. மேலும், டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் 8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 86 போலீசார் காயமடைந்துள்ளனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வன்முறை தொடர்பாக போலீசார் 86 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இதனால், டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவப்படை கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, டெல்லி விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டெல்லி பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News