அதிரும் டெல்லி! மகளிர் தினத்தில் 40,000 பெண் விவசாயிகள் போராட்டம்!!
அதிரும் டெல்லி! மகளிர் தினத்தில் 40,000 பெண் விவசாயிகள் போராட்டம்!!
சர்வதேச பெண்கள் தினமான இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் 40,000 பெண் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின்னரும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. அதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து களத்தில் இருக்கின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்றது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சர்வதேச பெண்கள் தினமான இன்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40,000 பெண்கள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தினர்.
500 பேருந்துகள், 600 மினி பேருந்துகள், 115 ட்ரக்குகள் என வாகனங்களில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெண்கள் டெல்லி எல்லையான சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் ஆகிய பகுதிகளுக்கு வந்த போராட்டம் நடத்தினர்.
பெண்கள் தினம் என்பதால் அனைத்து போராட்டங்களுக்கும் பெண்கள் தலைமை தாங்கினர். இதனால் டெல்லி விவசாயிகள் போராட்டம் உலக அளவில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
newstm.in