விஜய், சூர்யா காலில் விழுகாத குறையாக மன்னிப்புக் கேட்ட மீரா மிதூன்..!

விஜய், சூர்யா காலில் விழுகாத குறையாக மன்னிப்புக் கேட்ட மீரா மிதூன்..!

Update: 2021-03-17 19:01 GMT

நடிகர் விஜய் மற்றும் சூர்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள நடிகை மீரா மிதூன், தனது எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் இவர்தான் என்று கூறி பிரபல திருங்கை மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்பட்டுள்ளதாக கூறி, நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும அவருடைய குடும்பத்தினர் மீது பல்வேறு அடுக்கடுக்கான புகார்களை எழுப்பி பரபரப்பை கிளப்பினார் நடிகை மீரா மிதான். நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோர் மீது ட்விட்டரில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தார்.

விஜய், சூர்யா சினிமாவில் நிலைத்திருப்பதற்கு காரணம் அவர்களுடைய தந்தையர்கள் தான். இவர்களால் தமிழ் சினிமாவில் நெப்போடிசம் பிரச்னை தலைவிரித்தாடுகிறது என்று மோசமாக விமர்சித்தார் மீரா மிதூன். இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் மீரா மிதூனை சகட்டு மேனிக்கு விமர்சித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகை மீரா மிதூன், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் அப்ஸரா ரெட்டி என்கிற திருநங்கை என்பது இப்போது தான் எனக்கு தெரிந்தது. என்னுடனே இருந்துகொண்டு எனக்கு எதிராகவே அவர் செயல்பட்டுள்ளார். 


இதனால் விஜய் மற்றும் சூர்யா இருவரும் என்னை மன்னித்துவிடுங்கள். அவர்களுடைய ரசிகர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சினிமாவில் எனக்கு நடந்த சம்பவங்களுக்கு விஜய் மற்றும் சூர்யா தான் காரணம் என்று கூறி என்னை நம்ப வைத்து முட்டாளாக்கி விட்டார் அப்ஸரா ரெட்டி.

அவர் மீது நான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. தேசியளவிலும், சர்வதேசளவிலும் எனக்கு வாய்ப்புகள் வரும்போது, சொந்த ஊரான தமிழ்நாடு என்னை கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் நான் மிகவும் மன உடைந்துபோனேன். அதை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தனியாக ஒரு டீமை வைத்துக் கொண்டு அப்ஸரா ரெட்டி எனக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Tags:    

Similar News