மழையால் பாதித்த மக்களுக்கு சுழன்று சுழன்று உதவும் விஜய் மக்கள் இயக்கம் !!

மழையால் பாதித்த மக்களுக்கு சுழன்று சுழன்று உதவும் விஜய் மக்கள் இயக்கம் !!

Update: 2021-11-12 20:47 GMT

மழை வெள்ளத்தால் பாதித்த சென்னை மக்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவு அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானதன் காரணமாக தமிழகம் முழுக்க மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை தண்ணீரில் மிதக்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்தநிலையில், சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக உணவு அளிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். ‘விஜய் விலையில்லா உணவகம்’ மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் சமூக வலைதளங்களில் பரவவிட்டு வருகின்றனர். 

இதற்கு முன்னதாக, ஏற்கெனவே, கொரோனா பெருந்தொற்றிற்கு முன்பிருந்தே தஞ்சாவூரில் ‘விஜய் விலையில்லா உணவகம்’ ஆரம்பித்து ஏழைகளுக்கு மூன்றுவேளை உணவையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். சமீபத்தில் தென்சென்னையிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ ஆரம்பித்து உணவளித்தனர். மேலும் திருச்சி மற்றும் விருதாச்சலத்திலும் விஜய் விலையில்லா விருந்தகத்தை துவங்கி ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர். 


newstm.in


 

Tags:    

Similar News