விஜய் சேதுபதி,சூரி படத்திற்கு ஷூட்டிங்கிற்கு வர மறுக்கும் தொழிலாளர்கள்! காரணம் இது தான்
விஜய் சேதுபதி,சூரி படத்திற்கு ஷூட்டிங்கிற்கு வர மறுக்கும் தொழிலாளர்கள்! காரணம் இது தான்
தமிழ் திரையுலகில் இயக்குநர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் வெற்றிமாறன். இவரின் அடுத்த படமாக சூரியை கதாநாயகியாக வைத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கிஷோர் ஆகியோரின் நடிப்பில் எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்‘ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் இந்தப் படத்திற்கு இசையமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள காடுகளில் நடத்தப்பட்டு வந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பைத் துவங்க படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்த போது அவர்கள் வர மறுத்துவிட்டனர்.
காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படுவதால் பல கிலோமீட்டர் நடக்க செல்ல வேண்டியுள்ளது. காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கிக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட வேண்டியிருப்பதால் தொழிலாளர்கள் மறுத்திருக்கின்றனர்.காட்டுப் பகுதியில் இவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு பணிபுரிபவர்களுக்கும் வழக்கமாக கொடுக்கும் சம்பளத்தையே இந்தப் படத்திற்கும் கொடுப்பதை காரணமாக கூறுகின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து பாரதிராஜா விலகி அவருக்கு பதில் கிஷோர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.