தி பேமிலி மேன் 3 தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதி?

தி பேமிலி மேன் 3 தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதி?

Update: 2021-06-18 08:58 GMT

இந்தியாவில் தயாரான வெப் சீரிஸ்களில் சமீபத்தில் அதிகம் கவனம் பெற்றது, அமேசானில் வெளியான தி பேமிலி மேன். இந்திய உளவு அமைப்பு எப்படி இந்தியாவுக்கு வரும்  ஆபத்தை தகர்க்கிறது என்பது தொடரின் கருவாக உள்ளது. வெளியான இரு சீசன்களிலும் ஸ்ரீகாந்த் திவாரி கதாபாத்திரத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய் அனைத்து மொழிகளிலும் பிரபலமானார். .

இந்த நிலையில் தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மூன்றாவது பாகம் எடுக்கஉள்ளதாக கூறப்படுகிறது. பேமிலி மேன் அடுத்த சீசனில் நடிக்க மனோஜ் பாஜ்பாய் 2 மடங்கு சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  பேமிலி மேன் சீசன் 2 தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான தொடர் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்தனர்.

 

இந்நிலையில் தி பேமிலி மேன் 3 தொடரில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. காரணம் விஜய் சேதுபதி சில மாதங்களுக்கு முன்னர் பேமிலி மேன் தொடரின் இயக்குனர்கள் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். அதில் ஷாகித் கபூரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த தொடர் பேமிலி மேன் தொடரின் மூன்றாம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

newstm.in

Tags:    

Similar News