மீண்டும் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் விஜய் சேதுபதி - மோஷன் போஸ்டர் வெளியீடு !!

மீண்டும் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் விஜய் சேதுபதி - மோஷன் போஸ்டர் வெளியீடு !!

Update: 2021-03-18 13:20 GMT

தமிழில் பெரிய பட்ஜெட் மற்றும் பிரமாண்டமான படங்களை எடுப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் சன் பிக்சர்ஸ். இந்நிறுவனம் தற்போது ரஜினிகாந்த், சூர்யா, விஜய் உள்ளிட்டோர் நடித்து வரும் படங்களை தயாரித்து வருகிறது.

அந்த வரிசையில் சன் பிக்சர்ஸ் அடுத்து தயாரிக்கும் நடிகரின் படத்தை குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இயக்குநர் பொன்ராம் இதற்கு முன்னதாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் இவர் இயக்கியுள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ படம் ரிலீஸுக்காக தயாராகவுள்ளது.

பொன்ராம் - விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போதைக்கு வொர்க்கிங் டைட்டிலாக ‘வி.ஜே 45’ என்று வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் வைரலாகி வருகிறது. 

newstm.in

Tags:    

Similar News