விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ஓடிடியில் வெளியீடு? தியேட்டர் ரிலீஸ் கிடையாது?!
விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ஓடிடியில் வெளியீடு? தியேட்டர் ரிலீஸ் கிடையாது?!
தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இரவு ஊரடங்கால் இரவுக் காட்சியும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
தற்போதைய ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் தினமும் இரவுக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் திரையரங்கிற்கு அதிக கூட்டம் வரும். அன்று முழு ஊரடங்கை அமல்படுத்தி இதனால் கடும் நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதனால் தமிழ் திரைப்படங்களின் வெளியீடு மறுபடியும் ஓடிடி பக்கம் திரும்பியுள்ளது. அந்த வரிசையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனதுக்ளக் தர்பார் விஜய் சேதுபதி,ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நடிப்பில் அரசியல் கதைகளத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா .துக்ளக் தர்பார் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.