விஜய்யை இந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் !!
விஜய்யை இந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் !!
கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். அதனைத் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார். இவர் நந்தலாலா படத்தின் மூலம் நடிகராகவும் வலம் வந்தார்.
இந்நிலையில், டைரக்டர் மிஷ்கின் ட்விட்டர் ஸ்பேஸ் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம், “உங்கள் இயக்கத்தில் விஜய் நடித்தால், அவரை என்ன வேடத்தில் நடிக்க வைப்பீர்கள்?” என்று ஒரு ரசிகர் கேட்டார்.
அந்த கேள்விக்கு சற்றும் யோசிக்காமல், ஏற்கனவே தீர்மானித்து விட்டது போல், “விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வைப்பேன்” என்று மிஷ்கின் பதில் அளித்தார்.
‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா நடித்திருப்பது பற்றி இன்னொரு ரசிகர் கேட்டார். அதற்கு பதில் அளிக்கும்போது, ‘பிசாசு 2’ படத்துக்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார் மிஷ்கின்.