பாகுபலி சாதனையை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மாஸ்டர்..!
பாகுபலி சாதனையை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மாஸ்டர்..!
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சத்தமே இல்லாமல் புதிய சாதனையை படைத்துள்ளது. இதற்காக படக்குழுவினருக்கு பலரும் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மாஸ்டர். லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், விரைவில் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, படத்தின் டீசர், பாடல்கள் இணையதளத்தில் வெளியாகின. அது உலகளவில் டிரெண்டிங்கானது. இந்தியளவில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு தனி ரசிகர் வட்டம் உருவானது. பாலிவுட் முதல் கோலிவுட் பிரபலங்கள், விளையாட்டுத்துறை சார்ந்த பிரபலங்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், கவனமீர்த்த தொழிலதிபர்கள் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி டிரெண்டிங் செய்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான மாஸ்டர் பட டீசர் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. இதன்மூலம் அந்த டீசர் வெளியான நாள் முதல் தொடர்ந்து பல்வேறு சாதனைகள் படைத்து வருவதும் தெரியவந்துள்ளது.
யூ-டியூப்பில் தென்னிந்தியளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டிரெய்லருக்கான வரிசையில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தெலுங்கு டிரெய்லர் தான் முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை முறியடித்து மாஸ்டர் படத்தின் டிரெய்லர் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் தென்னிந்தியளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற டிரெய்லர் என்கிற சாதனையை மாஸ்டர் படத்தின் டிரெய்லர் படைத்துள்ளது.