ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை- மீறினால்.. கடும் எச்சரிக்கை !!

ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை- மீறினால்.. கடும் எச்சரிக்கை !!

Update: 2021-03-25 08:46 GMT

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி. வருகிற 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நாடெங்கும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது மக்கள் அனைவரும் வெட்டவெளியில் ஒன்று கூடி ஹோலிகா அரக்கி எரிப்பு மற்றும் அடுத்த நாள் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் பூசிக்கொண்டாடுவர்.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வண்ணமயமான இந்த பண்டிகைக்கு கடந்த ஆண்டே களை இழந்தது. இந்த நிலையில் இந்தாண்டு அடுத்தடுத்து ஒவ்வொரு நகரங்களில் ஹோலி பண்டிகைக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மும்பையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மும்பை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்று பரவல் காரணமாக வருகிற 28ஆம் தேதி மற்றும் 29ஆம் தேதி மும்பையில் நடைபெறும் ஹோலி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் பொது இடங்களில் எங்கும் ஹோலி கொண்டாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அனைத்து மாநகராட்சி அலுவலகத்திற்கும் சுற்றரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதனை மீறும் நபர்கள் மீது கொரோனா சட்டவிதிகளை மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல புனே மாவட்டத்திலும் ஹோலி கொண்டாட்டத்துக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது.

newstm.in

Tags:    

Similar News