மருத்துவ கழிவுகளுடன் சீன கப்பல் சென்னை வருகை

உலகமெங்கும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவியுள்ள நிலையில், சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ள கப்பலை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-01-30 19:51 GMT

உலகமெங்கும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவியுள்ள நிலையில், சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ள கப்பலை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உடனடியாக சீன மருத்துவக் கழிவு கப்பலை சென்னை பகுதியில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும் எனவும் மருத்துவக் கழிவுகளை இறக்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா, சென்னை துறைமுகத்தில் இருந்து சீனா கப்பலை திருப்பி அனுப்ப சென்னை துறைமுக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் 
 
newstm.in

Tags:    

Similar News