விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்கு தடை!
குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு விமான நிலையங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன், மங்களூர் ஏர்போர்ட்டில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டது. சக்தி வாய்ந்த அந்த வெடிகுண்டுகள் உடனே செயலிழக்க வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது . இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுக்க உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பும், கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
விமான நிலையம் வளாகத்திற்குள் பார்வையாளர்களுக்கு 10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் நுழைவு வாயிலிலேயே நிறுத்தி சோதனையிடப்படுகின்றன. விமானநிலைய நுழைவாயில் மற்றும் விமான ஓடுதளம் அருகிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஏர்போர்ட் வளாகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.விமான நிலைய சுற்றுப்பகுதிகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
newstm.in