வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்கப்பட்டவர்களா நீங்கள் ?அப்போ இந்த தேதியை மறக்காதீங்க
வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்கப்பட்டவர்களா நீங்கள் ?அப்போ இந்த தேதியை மறக்காதீங்க
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் ஆணையம் தேர்தலை பாதுகாப்பாகவும், சரியான முறையிலும், நேர்மையாகவும் நடத்த தேவையான அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.
இந்த தேர்தலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்தவர்கள் அனைவரும் மார்ச் 13,14-ம் தேதி நடைபெற இருக்கும் சிறப்பு முகாமில் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் 2021-ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையினை e-EPIC செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், அதற்கான சிறப்பு முகாம்கள் மார்ச் 13, 14 ஆகிய 2 நாட்களில் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிறப்பு முகாம்களில் தங்கள் எல்லைக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் தங்களது வாக்காளர் புகைப்பட அட்டையினை பதிவிறக்கம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்ய கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.