ஆரோக்கியம் வேண்டுமா? சமையலுக்கு இந்த எண்ணெய்யை மட்டுமே யூஸ் பண்ணுங்க!

ஆரோக்கியம் வேண்டுமா? சமையலுக்கு இந்த எண்ணெய்யை மட்டுமே யூஸ் பண்ணுங்க!

Update: 2021-02-22 10:50 GMT

இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் பலரும் தொலைக்காட்சிகளிலும், வலைதளங்களிலும் காட்டப்படும் சூரிய காந்தி, காட்லிவர் ஆயில், ஆலிவ் ஆயில் போன்ற பலவகையான எண்ணெய்களையே சமையலுக்கு உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் ஒரு தலைமுறைக்கு முந்தைய சமையலில் பெரும்பாலான வீடுகளில் கடலை எண்ணெய்களையே பயன்படுத்தி வந்தனர்.

பொதுவாகவே வேர்க்கடலையில் புரோட்டீன் அதிகம். அதனாலேயே தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையும், சிறிது வெல்லமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். கடலையில் புரோட்டினுடன் இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி யும் நிறைந்திருக்கிறது.

அதே போல் கடலையில் இருந்து பெறப்படும் எண்ணெய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.கடலை எண்ணெய்க்கு இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகம் . கடலை எண்ணய்யில் அடங்கியுள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் உடலுக்கு இயற்கையான முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து இதயம் சம்பந்தமான நோய்கள், மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவதை தடுக்கிறது என்பது பல மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக பெண்கள் கடலை எண்ணெய்யில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் அவர்களின் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். முக்கியமான விஷயம், நீங்கள் பயன்படுத்தும் கடலை எண்ணெய் சுத்தமானது தானா என்பதை சரி பார்த்துப் பயன்படுத்துங்க!

Tags:    

Similar News