அதீத சிந்தனையில் இருந்து விடுபட வேண்டுமா..? அப்போது இதை படிங்க..!

அதீத சிந்தனையில் இருந்து விடுபட வேண்டுமா..? அப்போது இதை படிங்க..!;

Update: 2021-10-22 13:14 GMT

மனதில் ஏற்படும் வருத்தம் பயமாக மாறி, அதன் விளைவாக அச்சத்துடன் நாட்களை கடப்பது தான் அதீத சிந்தனையாகும். இந்த வார்த்தையை நேர்மறை அல்லது எதிர்மறை என இருவேறு அர்த்தங்களிலும் பொருள் கொள்ள முடியும்.

எனினும் அதீதமாக சிந்தக்கக்கூடிய பலரும் நேர்மறையான எண்ணங்களை கொண்டிருப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. வாழ்க்கையில் நடந்த வருத்தத்தக்க சம்பவத்தை ஆழ்மனதுக்கு கொண்டு செல்வதால் ஒருவித பயம் அல்லது பதைபதைப்பு உண்டாகும். இந்த அதீத சிந்தனையால் நாம் பதற்றம் அல்லது மன அழுத்தத்தால் அகப்பட்டுக்கொள்கிறோம்.

அதீதமான சிந்தனையால் ஒருவித அதிர்ச்சிக்குள் நாம் தள்ளப்பட்டுவிடுகிறோம். மன அழுத்தம் அதிகரித்து மேலும் சிந்திக்கும் திறனை நாம் இழந்துவிடுகிறோம். இதனால் நம் மனதில் உறுதியற்ற நிலைபாடு உண்டாகிவிடுகிறது. எந்தவொரு விஷயத்தையும் சரி தவறு என்று பிரித்து பார்க்க இயலாதவராகி விடுகிறோம். 

முதலில் இதுபோன்ற அதீத சிந்தனையில் இருந்து விடுபட, உங்களை அதிக சோர்வு அல்லது அதிக பதற்றத்திற்கு உட்படுத்துகிற விஷயத்தை கண்டறியுங்கள். அதிலிருந்து நீங்கள் வெளிவர முடிவு செய்தால், பாதி கிணறை தாண்டிவிட்டதாகிவிடும். மீதக் கிணறை தாண்ட, அந்த விஷயத்தில் இருந்து நீங்கள் மீண்டுவரவேண்டும்

நாம் ஏன் அதிகமாக சிந்திக்கிறோம் என்கிற கேள்வி உங்களுக்குள் எழும் போது, தயவு செய்து அதற்கான பதிலை தேடுங்கள். அப்போதும் அதனால் ஏற்படும் உணர்ச்சி, எண்ணச்சிதறல்களை கட்டுப்படுத்த முடியும். புதிய திட்டங்களை உருவாக்கிடுங்கள், இதனால் வருத்தம் தரும் சிந்தனைகள் அறவே மனதில் தோன்றாது.

கோபம் வரும் போது, உணர்ச்சிகள் மேல் எழும்போது கண்களை மூடுங்கள், நன்றாக இழுத்து மூச்சு விடுங்கள். இதனால் கோபம், உணர்ச்சிகள் மேலெழுவது போன்ற செயல்பாடுகள் கட்டுக்குள் வரும். மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இதன்மூலம் நேர்மறையான எண்ணங்கள் வளரும். உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இது எதிர்மறை எண்ணங்கள் உருவாவதை தடுக்கும்.

ஒரேநாளில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துவிடாது. படிப்படியாக மாற்றங்களை கொண்டு வாருங்கள். அவை உங்களை நிலைப்படுத்தும். மனப்பக்குவத்தை வளர்த்திடுங்கள், அது உங்களை சிறந்த நபராக மாற்றும். கடின உழைப்பை மட்டுமே கருத்தில்கொண்டால் தேவையில்லாத சிந்தனைகள் மனதில் இடம்பெறாது என்பதை எப்போதும் மறவாதீர்கள். 

Tags:    

Similar News