மக்களே எச்சரிக்கை !! நாடு முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம்!!

மக்களே எச்சரிக்கை !! நாடு முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம்!!

Update: 2021-02-17 20:19 GMT

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும்  நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லி அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு, எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், பத்திரிகை, ஊடகவியலாளர்கள், திரைக் கலைஞர்கள், வழக்கறிஞர்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் விவசாயிகளின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. நாளை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்ட அறிவிப்பு காரணமாக, பஞ்சாப், அரியானா, உ.பி., மேற்கு வங்கத்தில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News