மக்களுக்கான எச்சரிக்கை பதிவு..!! தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

மக்களுக்கான எச்சரிக்கை பதிவு..!! தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

Update: 2022-01-03 23:36 GMT

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 27,52,856 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 876 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 852 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 5,65,306 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 662 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,05,696 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,364 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 1,02,898 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 5,68,12,969 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,796 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Similar News