தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை பெய்யும் என எச்சரிக்கை.. 4 நாட்கள் மழை நீடிக்குமாம் !

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை பெய்யும் என எச்சரிக்கை.. 4 நாட்கள் மழை நீடிக்குமாம் !

Update: 2021-12-14 08:00 GMT

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தில் தத்தளித்தன. தற்போது மழை குறைந்துள்ளது. எனினும் அவ்வப்போது பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவக் காற்று காரணமாக இன்று (டிச.14) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யும். 

15 மற்றும் 16ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 17ஆம் தேதி தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழைபெய்யக் கூடும்.

\

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

Similar News