இந்த 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! அதிர்ச்சி தரும் கொரோனா அதிகரிப்பு!

இந்த 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! அதிர்ச்சி தரும் கொரோனா அதிகரிப்பு!

Update: 2021-03-12 15:45 GMT

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய , மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பாதிப்பு மறுபடியும் அதிகரித்து வருகிறது.உலகளவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவிலும் கூட குறைந்து வந்த நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா  மாநிலங்களில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது.. எனவே அம்மாநிலங்களில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மாவட்டங்களில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு  இந்தியாவில் 6 மாநிலங்களில்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த பல்வேறு புதிய வழிகாட்டுகளையும் அரசு வெளியிட்டுள்ளது எனவும், அது குறித்து பொது சுகாதார நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுக்கள் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் எழுச்சியால், கொரோனாவின் 2-வது அலை இந்தியாவில் நாடு தழுவிய இரண்டாவது அலை தொடங்கலாமோ  என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே மிக மோசமான நிலையில்  மகாராஷ்டிராவில் 2.2 மில்லியன் கொரோனா பாதிப்புகள் உள்ளன. 24 மணி நேரத்தில் மட்டும் 11,141 புதிய பாதிப்புக்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில்  1.07 மில்லியன் கொரோனா பாதிப்புடன்  கேரளாவும், மூன்றாவது இடத்தில் பஞ்சாபும் உள்ளன. இதனை ஆராயும் வகையில்  மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு பொது சுகாதார நிபுணர்களைக் கொண்ட உயர் மட்ட குழுக்கள்  மத்திய அரசு மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நியமித்தது.இந்த குழுக்கள் திடீரென்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தற்கான காரணங்களை கண்டறியவும்,  அதைக் கட்டுப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை இந்த குழுக்கள் பரிந்துரைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News