போர் கப்பலில் வெடி விபத்து… மூன்று வீரர்கள் உயிரிழப்பு!!
போர் கப்பலில் வெடி விபத்து… மூன்று வீரர்கள் உயிரிழப்பு!!
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் மூன்று வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை கடற்படை தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலின் உள்ளே ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக மூன்று கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.
பெரியளவில் பொருட்சேதம் ஏற்படவில்லை என்றும், உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.30 மணியளவில் ரன்வீர் கப்பலில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கப்பலில் இருந்த ஆயுதங்கள் அல்லது குண்டுகள் ஏதும் வெடிக்கவில்லை எனவும் கடற்படை வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Mumbai: 3 Naval personnel die in explosion onboard INS Ranvir, probe ordered
— ANI Digital (@ani_digital) January 18, 2022
Read @ANI Story | https://t.co/joqtCvtGIP
#INSRanvir #explosion pic.twitter.com/CA0sarLkFh
ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல்கள் 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன. இந்தக் கப்பல்கள் சோவியத் யூனியன் அரசால் உருவாக்கப்பட்டவை. இவை வான்வழி தாக்குதல், நீர்மூழ்கி தாக்குதல், ஏவுகணை தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொண்டு பாதுகாப்பு வழங்குபவை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in