மறுபடியும் முதலில் இருந்தா? 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்!

மறுபடியும் முதலில் இருந்தா? 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்!

Update: 2021-04-07 15:50 GMT

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் உட்பட 18 மாநிலங்களில் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் குஜராத்தில்  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 3.25லட்சம் பேர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  4,598 பேர். மேலும் அதிகரித்து வருவதை அடுத்து  குஜராத்தின் 20 முக்கிய நகரங்களில் ஏப்ரல் 30 வரை இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு செயல்படுத்தப்படும். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  பெரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏப்ரல் 30ந்தேதிக்கு பிறகு நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாரத்தில்  திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை மட்டுமே அரசு அலுவலகங்கள்  செயல்படும் . சனிக்கிழமைகளில்  மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் ஏப்ரல்  30 வரை இதேபோன்று, இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News