முழுசா ஜெயலலிதாவாகவே மாறி இருக்கும் கங்கனாவை பாருங்க- தலைவி டிரெய்லர்..!

முழுசா ஜெயலலிதாவாகவே மாறி இருக்கும் கங்கனாவை பாருங்க- தலைவி டிரெய்லர்..!

Update: 2021-03-23 12:34 GMT

நடிகை கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவி’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ஏ.எல். விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவி’. இந்த படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா மற்றும் எம்.ஜி.ஆர்-ராக அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்று நடிகை கங்கனா தன்னுடைய 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் ‘தலைவி’ படத்தின் டிரெய்லரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடிக்காமல், அவராகவே திரையில் வாழ்ந்திருக்கிறார் கங்கனா.

Full View

மேலும் எம்.ஜி.ஆராக படத்தில் நடித்துள்ள அரவிந்த் சாமி அதிக கவனம் ஈர்த்துள்ளார். அவருடைய தோற்றம், உடல்மொழி, நடிப்பு அனைத்தும் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக டிரெய்லரை கண்ட ரசிகர்கள் கமெண்டு செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி, மதுபாலா, பூர்ணா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக தயாராகியுள்ள இந்த படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிகர்னிகா, பங்கா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கங்கனா ரணாவத்துக்கு நேற்று தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இது அவர் பெறும் நான்காவது தேசிய விருதாகும். அதை தொடர்ந்து தற்போது தலைவி படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தன்னுடைய பிறந்தநாளுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளதாக கங்கனா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அனைவருடைய எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள தலைவி படம் வரும் ஏப்ரல் 23-ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Tags:    

Similar News