நாங்கள் கொரோனாவை எதிர்த்து போராடுகிறோம்... மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார்.. உத்தவ் தாக்கரே அட்டாக் !

நாங்கள் கொரோனாவை எதிர்த்து போராடுகிறோம்... மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார்.. உத்தவ் தாக்கரே அட்டாக் !

Update: 2021-04-18 09:57 GMT

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான கொரோனா தாக்கமும் நோயாளிகள் எண்ணிக்கையும் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டி உள்ளது. அதேநேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாராஷ்டிராவில் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல நோயாளிகளின் உயிரின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.

தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் பிரச்னை தீவிரமாக உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக பேச பிரதமரை தொடர்பு கொண்டேன். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக உள்ளார். மகாராஷ்டிராவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆக்சிஜனையும் மருத்துவ பயன்பாட்டுக்கு திருப்பி விட்டப்போதும் இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எந்த அளவு அதிகரிக்கும் என கணிக்க முடியாது. எனவே இங்கு 3ஆவது அலை ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும் என்பதால் தொழில் நிறுவனங்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

newstm.in

 
 

Tags:    

Similar News