இந்தியர்கள் யாரையும் நாங்கள் உளவு பார்க்கவில்லை - ஒன்றிய அரசு

இந்தியர்கள் யாரையும் நாங்கள் உளவு பார்க்கவில்லை - ஒன்றிய அரசு

Update: 2021-08-16 22:25 GMT

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் செயலியின் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வெளியான முதல் 300 பேர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஒன்றிய அமைண்ணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

இதனால் எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்து, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக விவகாரத்தில் சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் என்.ராம் உள்ளிட்டோர் பொது நல மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் 2 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “இந்தியர்கள் யாரையும் நாங்கள் உளவு பார்க்கவில்லை . பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News