எங்களுக்கு குடும்பம், குழந்தைங்க இருக்கு.. நீதிபதி முன்பு தூக்குதண்டனை குற்றவாளிகள் கதறல்..
எங்களுக்கு குடும்பம், குழந்தைங்க இருக்கு.. நீதிபதி முன்பு தூக்குதண்டனை குற்றவாளிகள் கதறல்..
பழங்குடியின பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூவருக்கும் தூக்குத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலங்கானாவின் லிங்காபூர் மண்டல் என்னும் பகுதியில் கடந்தாண்டு நவம்பரில் பழங்குடியின பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். பின்னர் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து விசாரணையும் நிறைவடைந்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா ரூபாய் 26 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, மூன்று பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது கதறிஅழுத குற்றவாளிகள் மூவரும் தங்களுக்கு குடும்பம், குழந்தைகள் இருப்பதாக நீதிபதியிடம் மன்றாடினர். எனினும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பை மாற்றவில்லை என நீதிபதி கூறினார்.
newstm.in