களைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020! லைவ் ரிப்போர்ட்!

ஆட்டோ மொபைல் துறை பெரும் சரிவை சந்தித்திருக்கும் இந்த வேளையில், இந்த எக்ஸ்போவில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களது புதிய மாடல் பைக்குகளையும், கார்களையும் காட்சிப்படுத்தியிருப்பது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

Update: 2020-02-07 01:58 GMT

டெல்லி ஆட்டோ எக்ஸ்போக்களில் பல்வேறு கான்செப்ட்கள் மற்றும் புதிய தயாரிப்புகளைத் தாண்டி, ஸ்பெஷல் எடிஷன்களும் எக்ஸ்போ காண வந்தவர்களின் கவனத்தைக் கவரும் விதமாக அமைந்திருக்கிறது. 

ஆட்டோ மொபைல் துறை பெரும் சரிவை சந்தித்திருக்கும் இந்த வேளையில், இந்த எக்ஸ்போவில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களது புதிய மாடல் பைக்குகளையும், கார்களையும் காட்சிப்படுத்தியிருப்பது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

இந்த முறை அறிமுகமான வாகனங்களில் பெரிதும் கவர்ந்திருப்பது டாடாவின் ஹெக்ஸா சஃபாரி எடிஷன் தான். கம்பீரமான பெயருக்கேற்றதைப் போன்றே இந்த எஸ்யூவி வெளிவந்துள்ளது. இந்த எஸ்யூவியின் ஃபோர்  வீல் டிரைவ் மாடலை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சஃபாரி எடிஷன், டூயல் டோன் ஃபினிஷுடன் காண்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. கேபினில் சஃபாரி பேட்ஜிங் இருப்பது இந்த மாடலின் கூடுதல் சிறப்பம்சம். புதிய கண்கவர் சீட் கவர்கள் என்று வழக்கமான மாடலை விட அட்ராக்‌ஷன்கள் அதிகம். என்ன விலையில் அறிமுகமாகின்றது என்பதில் இன்னும் தெளிவான தகவல்கள் இல்லை.

newstm.in

Tags:    

Similar News