பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? விளக்குகிறார் எல்.முருகன்..!

பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? விளக்குகிறார் எல்.முருகன்..!

Update: 2021-07-03 14:42 GMT

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் வெற்றிபெற்றது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், “பாஜக சார்பில் வெற்றிபெற்ற 4 எம்எல்ஏ-க்களும் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சந்திப்பின்போது பிரதமர் நீர் சேமிப்பு குறித்து  அறிவுறுத்தினார், தமிழகம் குறித்தும் கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டில் பல்வேறு ஆன்மீகத் தலங்கள் உள்ளதால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழக நலன் தொடர்பாக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழ்நாடு அரசியலில் நடைபெறும் தேச பிரிவினை வாத செயல்பாடுகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். குறிப்பாக, ஜெய்ஹிந்த் விவகாரத்தையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம்.

மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க பிரதமர் அறிவுறுத்தினார். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி தமிழ்நாட்டில் வீணடிக்கப்படுவதை தரவுகளோடு விளம்பரப்படுத்துங்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்” என எல்.முருகன் கூறினார்.
Tags:    

Similar News