அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன? – பேரவையில் காரசார விவாதம்!!

அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன? – பேரவையில் காரசார விவாதம்!!

Update: 2022-01-06 18:45 GMT

அம்மா உணவகத்தை மூடினால் என்ன, கலைஞர் பெயர் உள்ள எத்தனை திட்டங்களை மூடி உள்ளீர்கள் நீங்கள் என பேரவையில் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவக பணியாட்கள் குறைக்கப்பட்டுள்ளனர், அம்மா உணவகத்திற்கு பொருட்களும் குறைவாக வழங்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு, அம்மா உணவகம் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. பணியாளர்கள் சூழற்சி முறையில் பணியில் உள்ளனர். மழை நேரத்தில் கூட இலவச உணவு அம்மா உணவகங்கள் மூலம் அளிக்கப்பட்டது என்றார்.

உடனே குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன்அம்மா உணவகத்தை மூடினால் என்ன,  கலைஞர் பெயர் உள்ள எத்தனை திட்டங்களை மூடி உள்ளீர்கள் நீங்கள்  என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகத்தை மூடினால் அனுபவிப்பீர்கள் என்றார். உடனே குறுகிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின், கலைஞர் பெயரில் உள்ள திட்டங்களை மூடியதால் தான் தமிழக மக்கள் உங்களுக்கு இந்த தண்டனை கொடுத்து உள்ளனர், அனுபவித்து கொண்டிருக்கிருக்கிறீர்கள் என்றார்.

இப்படி அம்மா உணவகம் குறித்து சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

newstm.in

Similar News