என்னது.. செல்போன் கோபுரமே திருட்டா? - அதிர்ச்சியில் காவல்துறை !!

என்னது.. செல்போன் கோபுரமே திருட்டா? - அதிர்ச்சியில் காவல்துறை !!

Update: 2022-01-08 09:59 GMT

செல்போன் கோபுரத்தை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை கூடல்புதூரில் உள்ள அமராவதி பகுதியில் பிரபல நிறுவனத்தின் செல்போன் டவர் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு செல்போன் டவர் கோபுரம் திடீரென காணாமல் போனதாக, அந்நிறுவனத்தின் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். என்னது செல்போன் கோபுரத்தையே காணுமா என பரபரப்பு எழுந்தது. 

புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், செல்போன் கோபுரம் திருடு போனது உறுதியாகியுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் எவ்வித தகவலும் கிடைக்காததால், செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல் செல்போன் கோபுரம் காணாமல் போயிருக்க வாய்ப்பு இல்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

அதேநேரத்தில், ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையில் செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாடியில் இருந்த வானூர உயர்ந்த செல்போன் கோபுரத்தையே காணவில்லையா என்ற பரபரப்பு அப்பகுதி மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. 

newstm.in

Similar News