ராஜீவ் கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்.. காரணம் என்ன?

ராஜீவ் கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்.. காரணம் என்ன?

Update: 2021-08-07 04:40 GMT

விளையாட்டு துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது கேல் ரத்னா விருது. இது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரையொட்டி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்று வழங்கப்பட்டு வந்தது. இந்த விருதுகளை குடியரசுத் தலைவரிடம் இருந்து வீரர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

இந்நிலையில், இந்த விருதின் பெயர் மாற்றப்படுவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான் சந்தின் பெயரைச் சூட்ட வேண்டும் என நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் எனக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


அவர்களின் கருத்துகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருதானது, இனிமேல், 'மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா' விருது என அழைக்கப்படும். ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News