தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்? திமுகவின் முக்கிய வாக்குறுதிகள் என்னனென்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்? திமுகவின் முக்கிய வாக்குறுதிகள் என்னனென்ன?

Update: 2021-05-03 13:00 GMT

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி ராஜினாமா செய்து விட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார். நேற்றுடன் ஆளும் அ.தி.மு.க அரசு முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க புதிய அரசாக இம்மாதம் 7ம் தேதி பொறுப்பேற்கிறது. 

இந்த 10 வருடங்களில் மத்தியிலும், மாநிலத்திலும் எதிர்கட்சியாக இருந்து குறைகளை சொல்லி பழக்கப்பட்ட தி.மு.க.விற்கு, நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் நிறையவே இருக்கின்றன.  தி.மு.க அரசு போடும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்பதே தற்பொழுதைய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் குடும்ப தலைவியருக்கு மாதம்ப் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் முக்கிய வாக்குறுதியாக பார்க்கப்படுகிறது.  நீட் தேர்வை ரத்து செய்ய திட்டம்,  5 சவரன் வரையிலான  நகைக்கடன்கள் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுவின் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் ரூ.5 விலை குறைப்பு, டீசல் ரூ.4 விலை குறைப்பு, ஆலயப் புரணமைப்புக்கு என தனியாக 1000 கோடி ஒதுக்கீடு,  தமிழக வேலை வாய்ப்புகளில் 75 சதவிகிதம் இனி தமிழருக்கே என்ற ஆணை,  மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி, மாணவிகளுக்கு இலவச நாப்கின் என தி.மு.க அளித்திருக்கும் வாக்குறுதிகள் தமிழக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதி முதல் கையெழுத்தாக இருக்கும் என்பதே வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முதல் முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப் போகிறார் ஸ்டாலின். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா? என்பது போகப் போக தான் தெரியும்.

Tags:    

Similar News