ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 பேருக்கு விடுதலை கிடைக்குமா - அமைச்சர் சொல்வதென்ன ?
ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 பேருக்கு விடுதலை கிடைக்குமா - அமைச்சர் சொல்வதென்ன ?
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறும் போது,
“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது நிச்சயமாக உச்சநீதிமன்றம் நல்ல முடிவு கொடுக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம். 7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்படும்” என கூறினார்.
இதனிடையே அமைச்சருடன் சிறைசாலைக்குள் திமுக நிர்வாகிகள் சிலர் சென்றதால் இந்த சம்பவம் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.