வாட்ஸ் அப் சேவை நிறுத்தம் ! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !!
வாட்ஸ் அப் சேவை நிறுத்தம் ! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !!
தற்போது நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாகி வரும் வங்கித் துறைக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வாட்ஸ் அப் பெரும் உதவியாக இருந்து வரும் நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் வாட்ஸ் அப் நிதி சேவையை தடை செய்துள்ளது.
உலகில் இன்று இணையதளத்தின் உதவியால் எந்த பகுதிக்கும் நாம் சென்று வர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அப்படி சென்று வர நமக்கு மிக உதவியாக இருப்பது ஸ்மார்போன்கள் தான். ஆனால் அதை இன்னும் எளிதாக்கும் விதமாக வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் வலம் வந்துள்ளது. தற்போது நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாகி வரும் வங்கித் துறைக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வாடஸ் அப் பெரும் உதவியாகவே இருந்து வருகிறது. இதனால், வங்கிக்கு சென்று க்யூவில் நின்று பணத்தினை எடுத்து, அதன் பிறகு செலவு செய்வது என்பது பழைய கதையாகிவிட்டது, .
தற்போதெல்லாம் இணைய வங்கி, மொபைல் வங்கி என பல வசதிகள் உள்ளன. ஆனால் அதில் பெறும் சேவைகளை விட இன்னும் எளிதாக மக்களுக்கு சென்று அடையும் வகையில், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் வாட்ஸ் அப்பில் நிதி சேவைகளை வழங்கி வருகிறது.
வாட்ஸ் மூலம் வங்கியில் உள்ள பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்ள முடியும். அதோடு கிரெடிட் கார்டு நிலுவை தொகை ஆகியவற்றை இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அதுமட்டும் அல்ல இன்னும் பல சேவைகளை வாட்ஸ் அப் மூலம் பெற முடியும். குறிப்பாக ஐஎப்எஸ்சி கோடு, வங்கி விடுமுறை நாட்கள் என பலவற்றை அறிந்து கொள்ள முடியும்.
அதோடு மினி ஸ்டேட்மென்ட்டையும் பெற்றுக் கொள்ள முடியும். இணைய வங்கியில் உள்ளதைப் போலவே ஸ்டேட்மென்ட் மற்றும் செக் புக்கிற்காக விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றை கூட நாம் இதில் இருந்து விண்ணபித்துக் கொள்ள முடியும். குறிப்பாக, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் நிலுவையில் உள்ள பேலன்ஸ் தொகை மற்றும் கார்டு ஸ்டேட்மென்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும், எஃப்டி சம்மரி மற்றும் வீட்டுக் கடன், வாகன கடன் பெற என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும் போன்ற சேவைகளையும் இதில் அறிந்து கொள்ள முடியும்.
இந்த நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் எடுத்த திடீர் பாலிசி முடிவு காரணமாக, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் வாட்ஸ் அப்பில் சேவைகளை தடை செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே வேளையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.