சமந்தாவுக்கு கைதட்டும் போது ‘சைலன்ஸ்’ என்று கடுப்பில் கத்திய நயன்தாரா..!
சமந்தாவுக்கு கைதட்டும் போது ‘சைலன்ஸ்’ என்று கடுப்பில் கத்திய நயன்தாரா..!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இதற்கான ஷூட்டிங் பணிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் நடித்து வருகின்றன. அண்மையில் இதற்கான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்துள்ளன. அப்போது குறிப்பிட்ட காட்சியில் நடிகை சமந்தா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதை பார்த்த படக்குழு ஒட்டுமொத்தமாக கைதட்டி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது.
அருகில் ஷாட்டை கவனித்து வந்த நடிகை நயன்தாராவுக்கு படக்குழுவினரின் உற்சாகக்குரல் தொந்தரவாக இருக்கவே சைலன்ஸ் என்று சத்தம் போட்டு கத்தியுள்ளார். இதனால் படக்குழு கைதட்டுவதை நிறுத்திக் கொண்டு அவரவர் வேலைகளை கவனிக்க தொடங்கினர்.
காட்சி முடிந்த பிறகு அவரும் நடிகை சமந்தாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இயக்குநராக விக்னேஷ் சிவன் இருக்கும் போது நயன்தாரா சைலன்ஸ் என்று கத்தியது சிலருக்கு கடுகடுப்பாக இருந்தாலும், நயன்தாரா என்பதால் யாரும் அதை பெரிதுப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.