தடுப்பூசி பூஸ்டர் டோசை எப்போது செலுத்தலாம்?- உலக சுகாதார அமைப்பு விளக்கம் !!

தடுப்பூசி பூஸ்டர் டோசை எப்போது செலுத்தலாம்?- உலக சுகாதார அமைப்பு விளக்கம் !!

Update: 2021-08-24 17:56 GMT

கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டாலும் 3ஆவது அலை எச்சரிக்கை எழுந்துள்ளது. இதனையொட்டி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்துகள் இரண்டு தடுப்பூசி டோஸ்களாக போடுகின்றன. பல்வேறு நாடுகளில் ஒரு டோஸ் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா உருமாறிக்கொண்டே வருவதால் பல நாடுகள் தங்களது குடிமக்களுக்கு 3ஆவது டோஸ் தடுப்பூசி அதாவது பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு செய்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் பூஸ்டர் செலுத்தப்பட்டு வருகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 3ஆவது டோஸ் அவசியம் என்று கருதுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனால் பூஸ்டர் டோஸ் திட்டத்துக்கு உலக சுகாதார அமைப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதனால் உலகளவில் தடுப்பூசியின் சமத்துவமின்மை மற்றும் புதிய கொரோனா மாறுபாடு ஏற்படும் என்றும், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வினியோகத்தில் பாதிப்பு உண்டாகும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனாலும் உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை பல நாடுகள் நிராகரித்துள்ளன.

இந்த நிலையில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி டோஸ் செலுத்து வதை 2 மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறும்போது, சிறிய மக்கள் தொகை கொண்ட நாடுகள் தடுப்பூசியின் முதல் மற்றும் 2ஆவது டோஸ் செலுத்த சிரமப்பட்டு வருவது கவலை அளிக்கிறது என்றும்  கூறினார். 

newstm.in

Tags:    

Similar News