கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் ?- மத்திய அரசு விளக்கம் !!
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் ?- மத்திய அரசு விளக்கம் !!
கொரோனா பாதித்தவர்கள் பின்னர் எப்போது தடுப்பூசி செலுத்தலாம் என ஒரு சந்தேகம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு தற்போது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா தொற்று இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. எனினும் கொரோனா பாதித்தவர்கள் பின்னர் எப்போது தடுப்பூசி செலுத்தலாம் என ஒரு சந்தேகம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு கட்ட தகவல்கள் பரவும் நிலையில், இப்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஒருவருக்கு ஆய்வக பரிசோதனயில் கொரோனா உறுதியானால் அவர் குணமடைந்து 3 மாதங்கள் கழித்தே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
தற்போது மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்களுக்கும் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கும் இந்த விதி பொருந்தும். அறிவியல் அடிப்படைகள் படியும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அளித்த பரிந்துரைப்படியும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுவதாகவும் விகாஸ் ஷீல் தெரிவித்துள்ளார்.
newstm.in