கோவிஷீல்டு 2ஆவது டோஸ் எப்போது கிடைக்கும்.. மத்திய அரசு பகீர் தகவல் !!

கோவிஷீல்டு 2ஆவது டோஸ் எப்போது கிடைக்கும்.. மத்திய அரசு பகீர் தகவல் !!

Update: 2021-05-16 16:36 GMT

கோவிஷீல்டு தடுப்பூசி 2ஆவது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா மிகத்தீவிரமாக பரவி வருகிறது. மேலும் மருந்து மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகள், உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது. தடுப்பூசியை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. 

மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகம் மிகக்குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 6 கோடி டோஸ்க்கு மேல் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால் தற்போது இந்தியாவில் தடுப்பூசி இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி 2ஆவது டோஸ் செலுத்திக்கொள்ள காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இனி கோவிஷீல்டு தடுப்பூசி 2ஆவது டோஸ் செலுத்திக் கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 2ஆவது டோஸ் செலுத்திக் கொள்ள தேதியை மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி காலம் 90 நாட்கள் என அதிகரிக்கப்பட்ட நிலையில் அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, தடுப்பூசி பற்றாக்குறையே காரணம் என கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News