தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது? முழு தகவல்கள் !!

தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது? முழு தகவல்கள் !!

Update: 2022-01-13 10:30 GMT

தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகையாக தைத்திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு

முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு நல்ல நேரம் பார்த்து பொங்கலிட்டு மக்கள் கொண்டாடுவர். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்து இங்கே பார்க்கலாம்.

பொங்கல் நாளன்று நல்ல நேரம் என்ன?

14.01.2022 - தை 01 - வெள்ளிக்கிழமை:

தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம்:

மதியம் 12.00 - 01.30 வரை

மாலை 04.30 - 06.00 வரை

15.01.2022 - தை 02 - சனிக்கிழமை:

மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம்:

காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

சிலர் கனு சனிக்கிழமை வைப்பார்கள். அதனால்

சனிக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:

காலை 07.30 - 09.00

காலை 10.30 - 12.00

சிலர் கனு தை 03 அனுசரிப்பார்கள். அதனால் 

ஞாயிற்றுக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:

காலை 06.00 - 07.30

காலை 10.30 - 12.00
 
இதனிடையே, சூரிய பகவான் தை 1ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போதுதான் மகா சங்கராந்தி புரு‌ஷர் பிறக்கிறார். உத்தராயண புண்ணிய காலமும் உதயமாகிறது.

இந்த ஆண்டு தை 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் மீன லக்னத்தில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் புதுப்பானையில் அல்லது பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாம். பொங்கல் வைக்க சிறந்த நேரமாக இது கணக்கிடப்பட்டுள்ளது

newstm.in


 

Similar News