12 - 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? - அரசு விளக்கத்தால் அதிர்ச்சி !!
12 - 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? - அரசு விளக்கத்தால் அதிர்ச்சி !!
12 - 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமானதால் அதனை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது மத்திய அரசு. அதன் ஒரு கட்டமாக கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இதுவரை 158 கோடியே 4 லட்சத்து 41 ஆயிரத்து 770 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தக்கட்டமாக 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 3 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 929 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 12 வயது முதல் 14 வயதிலான சிறுவர்களுக்கு இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இல்லை. இது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
newstm.in