சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் !

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் !

Update: 2021-12-26 11:45 GMT

ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்  நடத்தப்பட்டு வருகிறது. இன்று 16ஆவது மெகா தடுப்பூ முகாம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், சென்னை மடுவங்கரை பகுதியில் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.85% பேர் 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். குறிப்பாக இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இதனிடையே, சிறுவர்கள், கூடுதல் தடுப்பூசி செலுத்த பிரதமர் மோடி அனுமதி அளித்தது தொடர்பான அமைச்சர் பேசினார். அப்போது, மத்திய அரசின் உத்தரவுப்படி ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மாநகராட்சி பள்ளியில் தொடங்கப்படும். ஜனவரி 10ஆம் தேதி முதல் 9.78 லட்ச முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டோர் டோஸ் செலுத்தம் பணிகள் தொடங்கப்படும். 

15-18 வயதை சேர்ந்த சுமார் 33 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். 60 வயதை கடந்த 1.04 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் என கூறினார்.
 

newstm.in

Similar News