அடுத்த அதிர்ச்சி! கொரோனா 2வது அலை முடிவது எப்போது? அடுத்த 6 மாசத்துல 3வது அலை! தொடரும் ஆபத்து!
அடுத்த அதிர்ச்சி! கொரோனா 2வது அலை முடிவது எப்போது? அடுத்த 6 மாசத்துல 3வது அலை! தொடரும் ஆபத்து!
இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொற்றுநோயின் மூன்றாவது அலை சுமார் ஆறு முதல் எட்டு மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நினைத்துபார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில 2ஆவது அலை எப்போது முடியும், 3ஆவது அலை எப்போதும் தொடங்கும் என இந்திய அரசாங்கத்தின் அறிவியல் அமைச்சகத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தொற்றை கணித ரீதியாக கணக்கிடும் வகையில் சூத்ரா (SUTRA) என்ற மாடலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கடந்த ஆண்டு வடிவமைத்தது. இதனை பல்வேறு கணிதவியலாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் கொரோனா எப்போது உச்சம் தொடும். பாதிப்புகள் எப்போது குறையும் என கணித ரீதியாக சில தகவல்களைப் பெறலாம்.
கொரோனா பாதிப்பில் மாநிலங்கள் உச்சம் பெற்றன?
மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், கேரளா, சிக்கிம், உத்தரகண்ட், குஜராத், ஹரியானா, டெல்லி மற்றும் கோவா போன்ற மாநிலங்களும் ஏற்கனவே உச்சத்தை தொட்டு பாதிப்புகள் குறையும் நிலை வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, பாசிடிவ் விகிதம் ஆகியவை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது.
எந்த மாநிலங்கள் உச்சத்தில் உள்ளன?
மே 29 முதல் 31 வரை தமிழ்நாடு கொரோனா பாதிப்பில் உச்சத்தை காணும் என்றும், புதுச்சேரி மே 19-20 தேதிகளில் உச்சத்தை காணும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அசாம், பஞ்சாப், திரிபுரா, மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இரண்டாவது அலையின் உச்சத்தை இன்னும் தொடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது அலை?
மாதிரியின் படி, ஆறு முதல் எட்டு மாதங்களில் மூன்றாவது அலை எதிர்பார்க்கப்படுகிறது. அதே தாக்கத்தை தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கருதப்படுகிறது. எனினும் இதனால் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் தடுப்பூசிக்கு எடுத்துக்கொண்டிருப்பார்கள் என குழுவினர் கூறுகின்றனர். குறைந்தபட்சம் 2021 அக்டோபர் வரை மூன்றாவது அலை இருக்காது என்று கூறுகின்றனர்.
newstm.in