அந்த இளம்பெண்ணை எப்போது கைது செய்வீர்கள்.. வைரல் வீடியோவால் பரபரப்பு !!

அந்த இளம்பெண்ணை எப்போது கைது செய்வீர்கள்.. வைரல் வீடியோவால் பரபரப்பு !!

Update: 2021-08-02 18:08 GMT

லக்னோவில் கார் ஓட்டுனரை பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அவாத் பகுதி போக்குவரத்து சிக்னல் அருகே ஏராள வாகனங்கள் நின்றிருந்தன. மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. அந்த இடத்தில் பெண் ஒருவர் கார் ஓட்டுநர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளார். கார் தன் மீது மோதியதாக கூறும் பெண் போக்குவரத்து போலீஸ் முன்னிலையிலேயே அந்த கார் டிரைவரை  சரமாரியாக தாக்கினார்.

எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்ட அந்த டிரைவரின் செல்போனையும் பிடுங்கி அந்த பெண் உடைத்தார். தட்டிக்கேட்டவர்களிடமும் அந்த பெண் தகராறில் ஈடுபட்டார். ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. 

ஆனால் இது குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை. போலீசாரும் முறையான விசாரணை நடத்தவில்லை. இந்த நிலையில் கார் ஓட்டுநருக்கு நீதி வேண்டும் என்றும், அடாவடியாக நடந்துகொண்ட இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

குறிப்பாக #ArrestLucknowGirl என்ற ஹாஸ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதனால் அப்பெண் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. 


newstm.in

Tags:    

Similar News