துப்பாக்கி கிடைத்தது.. கத்தி எங்கே?.. எஸ்.ஐ கொலையில் அடுத்தடுத்து அவிழும் மர்மங்கள்..
துப்பாக்கி கிடைத்தது.. கத்தி எங்கே?.. எஸ்.ஐ கொலையில் அடுத்தடுத்து அவிழும் மர்மங்கள்..
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந்தேதி காவல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு பயங்கரவாதி அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதன் பின்னணி குறித்து அடுத்தடுத்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கத்தி குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி கேரளா மாநிலம் எர்ணாகுளம் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீர் ஓடையில் இருந்து கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரும் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை சம்பவம் நடந்த களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்து கேரளா வழியாக பஸ்சில் தப்பிச் செல்லும் வழியில் வீசி விட்டதாக தெரிவித்தனர். அதன்படி அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அடையாளம் காட்டினர்.
இதனிடையே கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் மீட்க போலீசார் 2 பயங்கரவாதிகளிடமும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கத்தியையும் மீட்ட பின்பு, மேலும் ஆதாரங்கள் திரட்ட அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் கேரளாவில் இருந்து கர்நாடகா மாநிலம் உடுப்பிக்கு போலீசார் அழைத்துச் செல்வார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையே எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனால் இந்த வழக்கு விரைவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் விசாரிக்கப்படும் என தெரிகிறது.
newstm.in