"என் குவாட்டரை எங்கே.. நீ தான் எடுத்தாய்.." சகோதரியை கொலை செய்த தம்பி..
"என் குவாட்டரை எங்கே.. நீ தான் எடுத்தாய்.." சகோதரியை கொலை செய்த தம்பி..
சென்னையில் மது பாட்டிலை மறைத்து வைத்ததாக ஆத்திரத்தில் அக்காவை குத்திக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த தாரகேஸ்வரி (55) என்பவர் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். இலங்கையில் வசித்து வந்த இவரது தம்பி குகதாசன் (49), சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த நிலையில் அக்கா வீட்டில் தங்கிவிட்டு 13ஆம் தேதி மலைக்கு சென்றுவிட்டு 15ஆம் தேதி மீண்டும் திரும்பினார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் குகதாசன் அக்காவுடன் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குகதாசன் குடிப்பதற்காக 2 மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.
அதில் ஒன்றை குடித்து விட்டு மற்றொரு பாட்டிலை குடிப்பதற்காக வைத்திருந்துள்ளார். பின்னர் அதை தேடிய போது கிடைக்கவில்லை என தெரிகிறது. அந்த மது பாட்டிலை தனது அக்கா தாரகேஸ்வரிதான் மறைத்து வைத்துவிட்டார் என நினைத்து அவரிடம் குகதாசன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த குகதாசன் தனது அக்காவை வீட்டில் இருந்த கத்தியால் குத்தியிருக்கிறார்.
newstm.in